நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேங்க் நெகாரா ஓபிஆர் விகிதத்தை  3 சதவீதமாக நிலை நிறுத்தியது 

கோலாலம்பூர்:

பேங்க் நெகாரா ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தி உள்ளது.

பேங்க் நெகாராவின் நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஆர்  3 சதவீதமாக நிலை நிறுத்த முடிவு செய்தது.

தொழிலாளர் சந்தை நிலைமைகள், உலகளாவிய வர்த்தகம் தொடர்ந்து மீண்டு வருகிறது.

மேலும் உலகப் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாக பேங்க் நெகாரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போதைய ஓபிஆர் விகிதத்தில் பணவியல் கொள்கையின் நிலைப்பாடு தொடர்ந்து பொருளாதாரத்தை ஆதரிக்கிறது.

பணவீக்கம் வளர்ச்சி வாய்ப்புகளின் தற்போதைய மதிப்பீட்டிற்கு ஆதரவாக உள்ளது.

இதன் அடிப்படையில் பேங்க் நெகாரா 7ஆவது முறையாக ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தி உள்ளது என்று பேங்க் நெகாரா கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset