
செய்திகள் இந்தியா
திரிபுரா மாநிலத்தில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு HIV பாதிப்பு
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் எச்ஐவி தொற்று நோய்க்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
எய்ட்ஸ் என்கிற எச்ஐவி தொற்றைக் குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இதைக் கட்டுப்படுத்த சில மருந்துகள் கண்டறிந்துள்ளனர். இந்த கொடிய நோய்ப் பாதிப்பால் பலரும் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகின்றது. ஆப்பிரிக்க போன்ற நாடுகளில் எச்ஐவி பாதிப்பின் தீவிரம் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு புதிய வடிவம் எடுத்துள்ளது.
அந்தவகையில், திரிபுராவில் கடந்த 2007 முதல் 2024 வரையிலான 17 வருட புள்ளி விவரங்களின்படி, சுமார் 828 மாணவர்கள் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக திரிபுராவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அரசு வெளியிட்ட எக்ஸ் பதிவில், திரிபுராவில் 828 மாணவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கும் திரிபுராவில் இருந்து மாணவர்கள் படிக்கச் சென்றிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைக் கண்டறிந்து மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm