நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

500 ரூபாய்க்கு கஷ்டப்படும் மக்கள் வாழும் ஒரு நாட்டில் அம்பானி குடும்பத்து ஆடம்பரத் திருமணம் தேவையா?: சூட்டைக் கிளப்பும் நெட்டிசன்கள்

மும்பை: 

இந்தியாவில் விமரிசையான அம்பானிக் குடும்பத் திருமணக் கொண்டாட்டங்கள் அந்நாட்டின் வருமான ஏற்றத்தாழ்வு மீது இணையவாசிகளின் கவனத்தைத் திருப்பியுள்ளது. அந்த திருமணத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் 

ஆனந்த் அம்பானியும் (Anant Ambani) ராதிகா மர்சண்ட்டும் (Radhika Merchant) நாளை மறுநாள் 12 ஜூலை அன்று திருமணம் செய்கின்றனர்.

திருமணத்தில் கனடியப் பாடகர் ஜஸ்டின் பீபர் (Justin Bieber) பாடவிருக்கிறார். அதற்கு அவருக்கு 10 மில்லியன் டாலர் (47 மில்லியன் ரிங்கிட்) வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஏற்கனவே மார்ச் மாதம் நடந்த ஒரு கொண்டாட்டத்தில் உலகத் தலைவர்கள், பிரமுகர்கள், அமெரிக்கப் பாடகி ரிஹானா (Rihanna) ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் மக்கள் வறுமையில் வாடும் நிலையில் படாடோபத் திருமணக் கொண்டாட்டங்கள் தேவையா? இது மாபெரும் அநாவசியமான ஆடம்பரச் செலவு என்று இணையவாசிகள் கொதிக்கின்றனர். 

Anant Ambani-Radhika Merchant wedding: From Amitabh Bachchan to Kim K's  makeup artist, here's a look at the guest list - BusinessToday

"மக்களில் சிலர் வாரத்துக்கு வெறும் 500 ரூபாயை வைத்துக் கொண்டு  குடும்பத்தை சமாளிக்கின்றனர். 72 கோடிச் செலவில் பாடகி ரிஹானாவை அழைத்து நிகழ்ச்சி படைக்கச் சொல்லும் நபர்களும் உள்ளனர். நினைத்தாலே வருத்தமாக உள்ளது..."

"இந்தப் பணக்காரர்கள் ஒரு திருமணத்துக்குச் செலவு செய்யும் தொகை, மில்லியன் கணக்கான இந்தியர்களின் பசியைப் போக்கலாம்!" என்று சிலர் கூறினர்.

வேறு சிலரோ ஆடம்பரக் கொண்டாட்டம் நாட்டின் உபசரிப்புத் துறையை மெருகூட்ட உதவும் என்று சொல்கின்றனர். 

"செல்வந்தர்கள் செலவு செய்வதே நல்லது. பொருளியல் வளர்ச்சிக்கு அது உதவும்,"

"திருமணத்தில் செலவாகும் தொகை பல துறைகளில் உள்ளவர்களுக்கு வருமானத்தைக் கொடுக்கும். பலரின் வாழ்வாதாரம் திருமணத்தை நம்பியுள்ளது," என்பது சிலரின் கருத்து. 

'யார் அவர்களுடைய செல்வத்தை எப்படிச் செலவழித்தால் என்ன?' என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். 

"அவர்கள் பணம், அவர்கள் விருப்பம்..." என்று சிலர் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகின்றனர். 

ஆனால் அவ்வளவு பெரிய தொகையை அனாவசியமாக செலவழிப்பதைவிட இல்லாதோருக்கு வழங்கி வாழலாமே என்று நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

500 ரூபாய்க்கு வழியில்லாதோர் அதிகம் வாழும் ஒரு நாட்டில் அம்பானி குடும்பத்து ஆடம்பரத் திருமணம் தேவையா? எனும் வாதம் சமூக ஊடகங்களில் களை கட்டி வருகிறது. 

அமெரிக்க ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தாஷியனின் ஒப்பனை கலைஞரான மரியோ டெடிவனோவிச்  அமெரிக்காவின் பிரபலம்   ஜூலியா சாஃப்  ஹாலிவுட் பிரபலங்களின் சிகையலங்கார நிபுணர் கிறிஸ் ஆப்பிள்டன் ஆகியோர் ஜூலை 12 ஆம் தேதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு வருகிறார்கள் 

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset