நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செந்தூல் ஸ்ரீ நாகம்மன் ஆலய விவகாரத்தில் மூன்றாம் தரப்பினருடன் பேச்சுவார்த்தையா? ஆலய செயலாளர் போலிசில் புகார்

கோலாலம்பூர்: 

செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் விவகாரத்தில் மூன்றாம் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மேம்பாட்டு நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும்.இதனை வலியுறுத்தி ஆலய செயலாளர் ஹரிஹரன் போலிசில் புகார் செய்துள்ளார்.

இந்த ஆலய நிலப் பிரச்சினை இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் வேளையில் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் மூன்றாம் தரப்புடன் ஒய்டிஎல் மேம்பாட்டு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

நாகம்மன் ஆலய நிர்வாகம் முறையாக தேசிய பதிவு இலாகாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

ஒய்டிஎல் மேம்பாட்டு நிறுவனம் எங்களிடம் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

தவிர திடீரென முளைத்த மூன்றாம் தரப்புடன் அல்ல என்று கோவில் செயலாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று காலையில் செந்நூல் போலிஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே. இராமலிங்கம், பத்து தொகுதி தலைவர் பாலகுமாரன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset