செய்திகள் விளையாட்டு
இறுதி ஆட்டத்துக்குக் குறிவைக்கும் இங்கிலாந்து, நெதர்லாந்து
முனிச்:
ஐரோப்பியக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மோதுகின்றன.
இந்த ஆட்டம் நாளை அதிகாலை ஜெர்மனியின் டோர்ட்மண்ட் நகரில் நடைபெறுகிறது.
தலைமை நிர்வாகி கேரத் சவுத்கேட் தலைமையின்கீழ் விளையாடும் இங்கிலாந்து முதல் சுற்றில் ஒரே ஓர் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இரண்டு ஆட்டங்களில் சமநிலை கண்டது.
காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் தோல்வியின் பிடியிலிருந்து அது நூலிழையில் தப்பியது.
காலிறுதியில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
பெனால்டியில் 5-3 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
மறுமுனையில், நெதர்லாந்து அதன் முதல் ஆட்டத்தில் போலந்தை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
இரண்டாவது ஆட்டத்தில் அது பிரான்சுடன் மோதியது. இந்த ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.
முதல் சுற்றின் கடைசி ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக ஆஸ்திரியாவிடம் நெதர்லாந்து 3-2 எனும் கோல் கணக்கில் தோற்றது.
முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து விளையாடிய விதம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாதபோதிலும் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அது கோல் மழை பொழிந்தது.
ருமேனியாவை அது 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
காலிறுதி ஆட்டத்தில் வலிமைமிக்க துருக்கியை அது 2-1 எனும் கோல் கணக்கில் போராடி வென்றது.
இந்நிலையில், இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற இங்கிலாந்தும் நெதர்லாந்தும் மிகுந்த முனைப்புடன் உள்ளன.
அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு குழுக்களும் விட்டுக்கொடுக்காமல் போராடும் என்பது உறுதி.
எனவே, ரசிகர்களின் கண்களுக்கு கால்பந்து விருந்து காத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 2, 2026, 2:42 pm
பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
மெஸ்ஸி ஸ்பெயின் கிளப்பான எல்டென்ஸை அதிகாரப்பூர்வமாக வாங்கினார்
October 2, 2026, 9:17 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் வெற்றி
October 1, 2026, 10:21 am
துங்கு மக்கோத்தா இஸ்மாயில் அயோப் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார்
October 1, 2026, 10:19 am
ரொனால்டோ போர்த்துகல் பயிற்சி முகாமை விட்டு வெளியேறினார்
September 30, 2026, 10:12 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து வெற்றி
September 29, 2026, 3:22 pm
