
செய்திகள் இந்தியா
போதைப் பொருள் கடத்தல், அமேசான் லஞ்ச விவகாரம் குறித்து விசாரணை தேவை: காங்கிரஸ்
புது டெல்லி:
தொழிலதிபர் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் துறைமுகத்தில் 3,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல், அமேசான் நிறுவனம் இந்தியாவில் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான ரண்தீப் சுர்ஜேவாலா புதன்கிழமை கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல், அதானி துறைமுகம் வழியாக நடைபெற்றுள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதம், 1.75 லட்சம் கோடி மதிப்புள்ள 25,000 கிலோ போதைப்பொருள் அந்த துறைமுகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ஆஷிஷ் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றுக்கொண்டு, கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் போதைப்பொருளைக் கடத்தி வந்தது யார்? பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்குத் தெரியாமல் கடத்தல் நடந்தது எப்படி?
இது, இந்திய இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாக்கும் செயல் இல்லையா? இந்த போதைப்பொருள், தலிபான்கள் கைப்பற்றியிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. இது, தேசபாதுகாப்பை மீறும் செயல் இல்லையா? இதுதொடர்பாக தொழிலதிபர் கெளதம் அதானியிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை.
அமேசான் லஞ்சம்:
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி இணைய வழி வர்த்தக நிறுவனமான அமேசானின் இந்திய சட்ட ஆலோசனைக் குழுவினர், இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மத்திய சட்ட அமைச்சகத்தின் வருடாந்திர பட்ஜெட் ரூ.1,100 கோடியாக இருக்கும் நிலையில், அமேசான் நிறுவனம் வழக்குகளுக்கு ரூ.8,546 கோடி செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான சிறு வணிகர்கள், சிறுகுறு தொழில் துறையினரின் வாழ்வாதாரத்தையும், தொழில் வாய்ப்புகளை அழிப்பதற்காக அமேசான் நிறுவனம் பணம் கொடுத்ததா?
இதுகுறித்து, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபரிடம் முறையிட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்றார் அவர்.
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள கெளதம் அதானிக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் இரண்டு கன்டெய்னர்களிலிருந்து 2988.21 கிலோ ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அண்மையில் பறிமுதல் செய்தனர்.
இந்தப் போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானிலுள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து முந்த்ரா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் இந்தப் போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.21,000 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, எம்.சுதாகர், அவரின் மனைவி துர்கா பூர்ணா வைஷாலி ஆகிய இருவரையும் சென்னையில் டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm