நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மகாகுரு மகாலிங்கத்திற்கு உலகக் குத்து வரிசை செம்மல் விருது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி விருது வழங்கினார்

சென்னை

மலேசிய குத்து வரிசை சிலம்பக் கலையின் முன்னோடிகளில் ஒருவரான மகாகுரு மகாலிங்கத்திற்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, "உலகக் குத்து வரிசை செம்மல் விருது" எனும் உலக நாயகன் விருதை வழங்கி கௌரவித்தார்.

உலகச் சிலம்பக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாபெரும் விருது விழா, சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடந்தது. இவ்விழாவில் சிலம்பக் கலையின் முன்னோடிகளில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முத்தாய்ப்பான இந்த விருது விழாவில் மகாகுரு மகாலிங்கத்திற்கு உலகக் குத்து வரிசை செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது, மலேசியர்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்கியதாக அமைந்தது.

சிலம்பக் கலையின் மீதும் தாம் கொண்ட காதல்தான் அந்த அங்கீகாரத்திற்கான காரணமென மகாகுரு மகாலிங்கம் கூறினார், அதோடு இந்த விருந்தை தமக்கு வழங்கிய உலகச் சிலம்பக் கழகத்திற்கும் தமிழ்நாடு ஆளுநருக்கும் அவர் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

-தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset