நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரொனால்ட் கோமன் 2026 உலகக் கிண்ணம் வரை நெதர்லாந்தின் நிர்வாகியாக இருப்பார்

முனிச்:

எவர்டன், பார்சிலோனா அணியின் முன்னாள் நிர்வாகியான ரொனால்ட் கோமன், யூரோ 2024 முடிவிற்குப் பிறகும் நெதர்லாந்தின் மேலாளராக நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.

கோமன் 2026 ஆம் ஆண்டு பிபா உலகக் கிண்ணம் வரை நெதர்லாந்து அணியுடன்
ஒப்பந்தத்தில் உள்ளார்.

யூரோ போட்டியின் குழுப் பிரிவில் கோமனின் அணி நான்கு புள்ளிகளை மட்டுமே எடுத்தது.

போலந்தை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து, பிரான்சுடன் 0-0 என டிரா செய்து பின்னர் ஆஸ்திரியாவிடம் 3-2 என தோற்றது.

ஆனால் அந்த முடிவுகள் சுற்று 16ல் ருமேனியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. காலிறுதியில் துருக்கியை 2-1 என்ற கணக்கில் வென்றது.

வரும் புதன்கிழமை அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடம் நெதர்லாந்து மோத உள்ளது. 

இந்நிலையில் இது தனது கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்ற எண்ணத்தை கோமன் நிராகரித்துள்ளார்.

ஒப்பந்தம் முடியும் வரை நீடிக்க விரும்புகிறீர்களா என்று இந்த வாரம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஆம், அவர்கள் இனி என்னை அகற்ற முடியாது என்று நான் நினைக்கிறேன் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset