நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டெஸ்லா கார் திரையில் பிழை; சுட்டிக்காட்டிய சீனச் சிறுமி: பதிலளித்த எலான் மஸ்க்

பெய்ஜிங்:

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள திரையில், தான் விரும்பியதை படமாக வரைவது காணாமல் போவதை எலான் மஸ்கிற்கு குறிப்பிட்டு காணொலி வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநராக உள்ளார். 

இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் உலகம் முழுவதும் முன்னிலையில் உள்ளது. 

மலேசியாவிலும் இந்தியாவிலும் டெஸ்லா நிறுவனத்திற்காக முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கிடையே தானியங்கி கார்களுக்கான மென்பொருளை சீனாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் சமீபத்தில் எலான் மஸ்க் ஆலோசனை நடத்தி இருந்தார். 

இந்த நிலையில், சீனாவைச் சிறுமி ஒருவர் எலான் மஸ்க்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அந்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறாது.

சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள திரையில், தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். 

அப்போது அவர் வரைந்த படங்கள் திடீர் திடீரென காணாமல் போகிறது. இதனால் கவலையடைந்த அந்தச் சிறுமி, இதில் ஏதோ பிழை இருப்பதாகவும் அதை எலான் மஸ்க் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து, அதை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “ஹலோ மிஸ்டர் மஸ்க், நான் சீனாவின் மோலியில் உள்ளேன். என்னுடைய கேள்வி உங்களுடைய கார் பற்றியது. நான் படம் வரையும்போது, சில நேரங்களில் லைன் இதுபோன்று (வீடியோவை காட்டி) மறைந்துவிடுகிறது. நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? இதைச் சரி செய்ய முடியுமா? நன்றி" என அதில் குறிப்பிட்டு, எலாஸ் மஸ்க்கையும் டேக் செய்துள்ளார். 

இதைக் கவனித்த எலான் மஸ்க்கும், “நிச்சயமாக” எனப் பதிலளித்துள்ளார். வைரலாகும் இந்த வீடியோவுக்குப் பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ இதுவரை ஒரு மில்லியன் பார்வைகளையும் 14,000 விருப்பங்களையும் பெற்றுள்ளது.

https://twitter.com/i/status/1807485214270099854

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset