நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தொடங்கியது

லண்டன்:

பிரிட்டனின் அடுத்த பிரதமரை  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது.

நாட்டின் புதிய அரசைத் தீர்மானிக்கக் கூடிய இந்தத் தேர்தலில், நாடாளுமன்ற ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு BREXIT பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும்.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset