நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கைப்பேசி வழியாக இந்தியா உட்பட நான்கு நாடுகளுக்கு உடனடியாகப் பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரிலிருந்து ஆசியாவிலுள்ள நான்கு நாடுகளுக்கு உடனடியாகவும் மலிவுக் கட்டணத்திலும் பணம் அனுப்பும் முறை விரைவில் அறிமுகமாகவுள்ளது.

புதிய முறையைப் பயன்படுத்தி சிங்கப்பூரிலிருந்து இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு, PAYNOW போன்ற செயலிகள் மூலம் பணம் அனுப்ப இயலும்.

சிங்கப்பூரையும் அந்த நான்கு நாடுகளையும் சேர்ந்த மத்திய வங்கிகளும் உடனடிப் பணப் பரிமாற்றுச் சேவை வழங்கும் கட்டமைப்புகளும் இதற்கான விதிமுறைகள், செயல்முறை போன்றவை தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன.

புதிய கட்டமைப்பு, நெக்சஸ் ஸ்கீம் ஆர்கனைசேஷன் (என்எஸ்ஓ) என்று அழைக்கப்படும்.

சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் பிஐஎஸ் எனும் அனைத்துலகப் பணப் பரிமாற்றமுறை வங்கி ஜூலை 1-ஆம் தேதி தெரிவித்தது.

மத்திய வங்கிகளின் அனைத்துலக அமைப்பான இது, உலகத் தரநிலைகளை உருவாக்குதல், விதிமுறைகளை வலுப்படுத்துதல், வங்கிகளை மேற்பார்வையிடுதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும்.

புதிய கட்டமைப்பு எப்போது சேவை வழங்கத் தொடங்கும் என்று தெரிவிக்கவில்லை.

தாய்லாந்து, இந்தியா ஆகியவற்றுடன் சிங்கப்பூர் ஏற்கெனவே இருதரப்புப் பணப் பரிமாற்றச் சேவை முறையைப் பின்பற்றிவருகிறது. அவை இரண்டும் தனித்தனியே இருவேறு அமைப்புகளின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

‘என்எஸ்ஓ’ கட்டமைப்பின்கீழ், உடனடிப் பணப் பரிமாற்றச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவற்றுக்கு இடையே தொடர்புகொள்ளும் முறை மேம்படுத்தப்படும். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தொடர்பு என்றில்லாமல், அவை ‘என்எஸ்ஓ’ கட்டமைப்புடன் ஒருமுறை தொடர்பு ஏற்படுத்தினால் போதுமானது.

உலகிலேயே பல நாடுகளுக்கு உடனடியாகப் பணம் அனுப்பும் சேவை வழங்கும் முதல் கட்டமைப்பாக ‘நெக்சஸ்’ விளங்கும்.

வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும்போது தனிநபர்களும் வர்த்தகங்களும் வர்த்தக வங்கிகளையும் வங்கிகளின் இணையச் சேவைகளையும் பயன்படுத்த வேண்டியுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரிவோர் பணமாற்று வணிகர்கள் மூலம் தாயகத்தில் உள்ள குடும்பத்தினருக்குப் பணம் அனுப்புகின்றனர். பெற்றோர் வெளிநாடுகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளின் செலவுகளுக்கு இவ்வாறு பணம் அனுப்புகின்றனர்.

பணமோசடி, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க, வங்கிகள் இத்தகைய பணப் பரிமாற்றத்தைப் பல்வேறு விதிமுறைகளின்கீழ் சோதிக்க வேண்டியிருப்பதால் இதற்கான கட்டணம் அதிகம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset