நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது

சிவகங்கை: 

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வின் போது பல வண்ணங்களில் செய்யப்பட்ட கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. 

முந்தைய அகழாய்வு நடவடிக்கையின்போது அங்கு 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், ஆயிரக்ணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களை மட்டுமல்லாமல் அனைத்துலகத் தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது கீழடி.

இதற்கிடையே கடந்த ஜூன் 18ஆம் தேதி அன்று கீழடி, கொந்தகை ஆகிய இரு இடங்களில் 10ஆம் கட்ட ஆய்வுப் பணி தொடங்கியது. இந்தப் பணிகளைக் காணொளி வசதி மூலம் சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தற்போது இரண்டு பெரிய அளவிலான குழிகள் தோண்டப்பட்டு கீழடியில் அகழாய்வு நடந்து வருகிறது.

முதற்கட்டமாகத் தோண்டப்பட்ட சில அடி ஆழத்திலேயே பல வண்ணங்களிலான கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. மொத்தம் 27 மணிகள் கிடைத்துள்ளதாக ஆய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கொந்தகை பகுதியிலும் அடுத்த சில நாள்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்க உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset