நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்களில் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர்; அவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தோர்: பெயர்களை வெளியிட்டார் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

ரியாத்: 

கடும் வெப்பத்தின் தாக்கத்தால் நடப்பு ஆண்டில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்களையும் சௌதியிலேயே அடக்கம் செய்ய அவர்களின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததாக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சவுதி அதிகாரி ஒருவர் கூறியதாவது. ஹஜ் யாத்திரை மேற்கொண்ட இந்தியர்களில் 90 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், வயோதிகம், வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட காரணத்தால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாத்திரை மேற்கொண்ட இந்தியர்கள் பலரை காணவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட 18 லட்சம் வெளிநாட்டு பயணிகளில் பேரில் சுமார் 900 பேர் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அங்கு வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு யாத்திரையின் போது வெப்பம் காரணமாக சுமார் 200 பேர் உயிரிழந்தனர். 2,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Funeral prayer Masjid Al - Haram Makkah || Janazah 2021

முன்னதாக, ஹஜ் புனித யாத்திரைக்கு விசா எடுக்க செலவிட முடியாத மக்கள், முறைப்படி பதிவு செய்யாமல் பல்வேறு வழிகளில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதும் உயிரிழப்புக்கு ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய அனைத்து வசதிகளையும் சவுதி அரசு ஏற்பாடு செய்கிறது.

முறைப்படி பதிவு செய்யாத மக்கள் உம்ராவுக்கு முன்கூட்டியே வந்து அங்கு சட்ட விரோதமாக தங்கி இருக்கின்றனர். அவர்கள் நீண்ட நேரம் வெயிலில் இருந்த காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி  முறையான தங்கும் வசதி இல்லாதது போன்ற பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஹாஜிகள்  குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ ராமநாதபுரத்தைச் சேர்ந்த  ரசிக்க பீவி (73),  திருநெல்வேலியைச் சேர்ந்த மைத்தீன் பாத்து (73),  சென்னையைச் சேர்ந்த நசீர் அஹமது (40), கரூரைச்  சேர்ந்த லியாக்கத் அலி (72) ஆகியோர் இதய நோய் தொடர்பான பிரச்னைகளால் ஹஜ் செய்கின்றபோது மக்கா, அரஃபா, மினா ஆகிய இடங்களில் இயற்கை எய்தி உள்ளனர். இயற்கை எய்தியவர்கள் அனைவரையும் சவூதியிலே அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் ஒத்துக் கொண்டுள்ளனர். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset