நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நச்சுணவு விவகாரம் தொடர்பாக 15 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன

கோம்பாக்: 

கடந்த ஜூன் 10-ஆம் தேதி நச்சுணவு உண்டு இருவர் உயிரிழந்தது தொடர்பாக கேட்டரிங் நடத்துபவர்கள் உட்பட 15 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்று கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நூர் அரிஃபின் முஹம்மத் நசீர் தெரிவித்தார்.

நச்சுணவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் உரையாடல்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த வாரம் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கோம்பாக் மாவட்ட அளவிலான KAMIL திட்டத்தில் காலை உணவு சாப்பிட்ட பிறகு 247 பேரில் 82 பேருக்கு உணவு நச்சு அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தது.

இந்த உணவை உட்கொண்ட 19 மாதக் குழந்தையும் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset