செய்திகள் இந்தியா
கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்தினால் 19 ரயில்கள் ரத்து: வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலம் அறிவிப்பு
டார்ஜிலிங்:
மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (வண்டி எண்: 13174) மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று (ஜூன் 17) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பல தடம்புரண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் லோகோ பைலட் உள்பட 15 பேர் பலியானதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நியூ ஜல்பைகுரி, சிலிகுரி சந்திப்பு, பாக்டோக்ரா, அளுவாபுரியா வழியாக செல்லக்கூடிய 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:
1. நியூ ஜல்பைகுரி - உதய்பூர் சிட்டி வாராந்திர எக்ஸ்பிரஸ்(19602)
2. திப்ருகர்-புதுதில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (20503)
3. திப்ருகர்-புதுதில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12423)
4. அகர்தலா-ராணி கம்லாபதி சிறப்பு ரயில் (01666)
5. சீல்டா-புதிய அலிபுர்துவார் படடிக் எக்ஸ்பிரஸ் (12377)
6. நாகர்கோவில் ஜூனி - திப்ருகர் சிறப்பு (06105)
7. புது தில்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (20506)
8. புது தில்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12424)
9. ஹவுரா-நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22301)
10.குவஹாத்தி- ஹவுரா சராய்காட் எக்ஸ்பிரஸ் (12346)
11. காமாக்யா ஆனந்த் விஹார் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் (12505)
12. குவஹாத்தி-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12510
13. நியூ ஜல்பைகுரி- ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (22302)
14. காமாக்யா-கயா எக்ஸ்பிரஸ் (15620)
15. திப்ருகர்- ஹவுரா கம்ரூப் எக்ஸ்பிரஸ் (15962)
16. குவஹாத்தி-ஓக்ஹா எக்ஸ்பிரஸ் (15636)
17. நியூ டின்சுகியா-தாம்பரம் எக்ஸ்பிரஸ் (15930)
18. பாமன்ஹாட்-சீல்டா உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ் (13148)
19. திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (22504)
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
