செய்திகள் விளையாட்டு
ரொனால்டோ பயிற்சி செய்வதை டிக்கெட் வாங்கி பார்க்கும் ரசிகர்கள்
முனிச்:
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் ரொனால்டோ பயிற்சியில் ஈடுபடுவதை ரசிகர்கள் டிக்கெட் வாங்கி பார்த்து வருகின்றனர்.
போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார்.
கால்பந்து விளையாட்டில் இவர் படைக்காத சாதனைகளே இல்லை எனலாம்.
கால்பந்து மூலம் அதிக வருமானம் ஈட்டும் வீரர் உட்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்து வருகின்றார் ரொனால்டோ.
இந்நிலையில் தற்போது ஜெர்மனியில் யூரோ கிண்ண போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் ரொனால்டோவும் பங்கேற்றுள்ளார்.
யூரோ போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் ரொனால்டோ போர்த்துகல் அணியை யூரோ கிண்ணத்தை கைப்பற்றி வெற்றிபெற செய்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகின்றது.
இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரின் தேசிய அணியுடன் பயிற்சி செய்வதைக் காண ரசிகர்களுக்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 9:01 am
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி
November 2, 2025, 9:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
November 2, 2025, 9:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
November 1, 2025, 2:10 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் மேலோங்க சமூக அமைப்புகளின் பங்களிப்பு
November 1, 2025, 10:42 am
எப்ஏஎம் மேல்முறையீட்டுக்கு பிபாவிடமிருந்து இன்னும் பதில் இல்லை
October 31, 2025, 11:19 am
மெஸ்ஸியின் சம்பளம் 97 மில்லியன் ரிங்கிட்: ஹியூங் மின்னிம் சம்பளம் 53 மில்லியன் ரிங்கிட்
October 31, 2025, 11:04 am
ஒரு போலி வானளாவிய அரங்கம் மூலம் 50 மில்லியன் மக்களை எப்படி ஏமாற்ற முடியும்?
October 30, 2025, 10:35 am
350 மீட்டர் உயரத்தில் கால்பந்து அரங்கம்: சவூதி அரேபியாவின் கனவுத் திட்டம்
October 30, 2025, 9:58 am
