நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது ஏன்?: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

சென்னை: 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு தொகுதியை புறக்கணிப்பதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுக ஆட்சியில் இருக்கும் வரை இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது. 

பணம், படை பலத்தை கொண்டு பரிசுகளை அள்ளிக்கொடுத்து போலி வெற்றியை பெற திமுக முயற்சிக்கும் என்றார்.

ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset