நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஃபைசல் குணமடையும்வரை அவரை சிலாங்கூர் கால்பந்து சங்கம் பாதுகாக்கும்

ஷா ஆலம்:

ஃபைசல் ஹலிம் குணமடையும் வரை அவரை சிலாங்கூர் கால்பந்து சங்கம் பாதுகாக்கும்.

அச் சங்கத்தின் தொழில் நுட்பப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ஷாரில் மொக்தார் கூறினார்.

சிலாங்கூர் கால்பந்து சங்கம் அவர்கள் ஒரு பொறுப்பான நிர்வாகம் என்பதை நிரூபிக்கும்.

குறிப்பாக அணியின் தூணான ஃபைசல் ஹலிம் குணமடையும் வரை அவரது நலனைக் கவனிப்பதாக உறுதியளிக்கிறது.

வரும் 2027ஆம் ஆண்டு இறுதி வரை சிலாங்கூர் அணியுடனான ஃபைசலின் ஒப்பந்தத்தின் நிலை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யப்படும்.

ஒரு தொழில்முறை கிளப் என்ற அடிப்படையில் ஃபைசல் உட்பட அனைத்து வீரர்களின் நலனைக் கவனிப்பது கிளப்பின் உரிமையாளர்களான எங்கள் பொறுப்பு.

ஃபைசல் மீண்டும் களத்திற்கு திரும்பும் வரை நிதி அம்சங்களுடன் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கிளப் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset