செய்திகள் விளையாட்டு
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி: இன்று ஜெர்மனியில் தொடக்கம்
முனிச்:
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் நடைபெற உள்ளது.
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டி யூரோ கிண்ணம்.
உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன.
கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சாம்பியன்களும் களம் காண உள்ளன.
போட்டியில் பங்கேற்கும் நாடுகள் தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
லீக் சுற்று இன்று முதல் ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து சுற்று-16 ஜூன் 29 முதல் ஜூலை 2ஆம் தேதி வரையிலும், காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5, 6 தேதிகளிலும் நடக்கும்.
அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9, 10 தேதிகளில் நடத்தப்படும். இறுதி ஆட்டம் ஜூலை 14ம் தேதி நடக்கும்.
இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஜெர்மனியில் உள்ள பெர்லின், முனிக், டோர்ட்மண்ட், ஹாம்பர்க், ஃபிரங்க்பர்ட் உட்பட 10 நகரங்களில் நடைபெற உள்ளன.
இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்து என ஏ பிரிவு அணிகள் களம் காணுகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 10:37 am
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான் தான்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
February 5, 2025, 9:31 am
ஸ்பெயின் கோபா டெல் ரெய் கிண்ணம்: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
February 5, 2025, 9:27 am
பிரான்ஸ் கிண்ண கால்பந்து போட்டி: காலிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி
February 4, 2025, 10:06 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
February 4, 2025, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
February 3, 2025, 10:07 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
February 3, 2025, 9:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
February 2, 2025, 12:07 pm
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
February 2, 2025, 12:04 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
February 1, 2025, 1:19 pm