நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஹஜ்ஜுப் பெரு நாளன்று ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: 

ஹஜ்ஜுப் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், பலியிடுவோர், இஸ்லாமியர்கள் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்:

“பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் குர்பானி என்ற பெயரில் ஆடு, மாடுகளை பலியிட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆடு, மாடுகள் வெட்டப்படுகின்றன. திருச்சி மாநகரில் ஆடு, மாடு வெட்ட தனியிடம் உள்ளது.
 
ஆனால் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஆடு, மாடுகள் பலியிடப்படுகின்றன. கால்நடைகள் பலியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

அந்த உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. எனவே, பக்ரீத் பண்டிகையின் போது மாநகராட்சி அனுமதியில்லாத இடங்கில் ஆடு, மாடுகளை பலியிடத் தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், திருச்சி மாநகராட்சியில் ஆடு, மாடுகளை பலியிட 10 இடங்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகள் பலியிடுவதை 2 வகையாக பார்க்கப்படுகிறது. 

ஒன்று வழக்கமாக பலியிடுவது. வழக்கமான நாட்களில் ஆடு மாடுகள் அறுப்பதை மாநகராட்சி கண்காணித்து வருகின்றது. விதிகள் மீறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இரண்டாவது மத ரீதியான சடங்குகளுக்காக பலியிடுவது. இதில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்க முடியாது. 

இதனை அரசியலமைப்புச் சட்டமும் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் இதனை தெளிவாக உள்ளது. எனவே மனுதாரர் கூறும் நிவாரணத்தை அரசால் வழங்க முடியாது என்றார். 

மத்திய அரசு சார்பில், விதிமுறைகளை மீறி ஆடு மாடுகள் பலியிடுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இதுவரை அவ்வாறு எந்த புகாரும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், மனுதாரர் பக்ரீத் பண்டிகையின் போது தமிழக முழுவதும் உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி வழங்காத இடங்களில் ஆடு, மாடுகளை வெட்டி பலியிடுவதை தடை செய்ய கோரி உள்ளார். பக்ரீத் பண்டிகை 17ம் தேதி இஸ்லாமியர்களால் கொண்டாடப்படவுள்ளது.
 
ஆடு, மாடுகளை பலியிடுவோரின் வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே மனுதாரர் இஸ்லாமிய சமூகத்தினர் அல்லது ஆடு, மாடுகளை பலியிடுவோரை எதிர்மனுதாரராக சேர்த்து மனு தாக்கல் செய்யலாம். விசாரணை ஒத்திவைப்படுகிறது என உத்தரவிட்டனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset