நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரசியலில் இருந்து விலகினார் வி.கே.பாண்டியன்

புது டெல்லி:

ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஒடிஸா பேரவைத் தேர்தலில், பாஜக 78 இடங்களில் முதல் முறையாக வென்றது. இதனால் 24 ஆண்டுகளாக தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழந்தது.

தேர்தல் பிரசாரத்தில் ஒடிஸாவை தமிழர் ஆள நினைப்பதா என்று பாஜக கேள்வி எழுப்பியது. மேலும் புரி ஜெந்நாதர் கோயில் சாவி தொலைந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் பாண்டியனை நேரடியாகத் தொடர்புபடுத்தி பேசினார்.

இது தமிழர்களை திருடர்கள் என்று பாஜக கூறுவதாக திமுக விமர்சித்தது.

இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பாண்டியன் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்து வந்தது.
இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.

பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு எனக்கு எதிரான பிரசாரமும் பங்கு வகித்திருந்தால், அதற்காக அனைத்து தொண்டர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. 24 ஆண்டுகளுக்கு முன் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தபோது என் வசமிருந்த சொத்துகள் மட்டுமே இப்போதும் என்னிடம் உள்ளன என்று பாண்டியன் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்று அரசியலுக்கு வந்த வி.கே.பாண்டியன், ஆறு மாதத்தில் அரசியலிலும் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset