செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கம்
சென்னை:
திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது அக்கட்சித் தலைமை.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பில், “திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இதேபோல், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த நா.புகழேந்தி உயிரிழந்த காரணத்தால் கட்சிப் பணிகள் நடந்திட கெளதம்சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 9:32 pm
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு
April 29, 2026, 1:54 pm
பாவேந்தர் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
April 28, 2026, 3:44 pm
மதுரை கயல்விழியைக் கரம்பிடித்த கைலாய மாப்பிள்ளை
April 27, 2026, 9:45 pm
புதுச்சேரியில் ஃபிரெஞ்சு மொழி நீக்கம்: ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு வைகோ கடும் கண்டனம்
April 27, 2026, 5:37 pm
திருச்சியில் பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளரை கட்டிப்போட்டு ஒரு கிலோ நகை கொள்ளை
April 27, 2026, 4:51 pm
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதும் மக்கள்
April 26, 2026, 10:02 pm
