செய்திகள் விளையாட்டு
சிலாங்கூர் கராத்தே தோ கொஜுகாய் போட்டியில் 200 போட்டியாளர்கள் பங்கேற்பு
செமினி:
சிலாங்கூர் கராத்தே தோ கொஜுகாய் போட்டியில் 200க்கும் மேற்ப்பட்ட போட்டியாளர்கள் கலந்துக் கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.
7ஆவது சிலாங்கூர் கராத்தே தோ கொஜுகாய் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை செமினி சமூக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்ற இப்போட்டியில் 4 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சுமார் 200 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனைவரும் காஜாங், செமினி, பத்துமலை, செராஸ், செலாயாங் பாரு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
உலு லங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் ராஜன் முனுசாமியின் பிரதிநிதிகளாக காஜாங் நகர திட்டமிடல் சங்க உறுப்பினர்கள் சந்திரன் ராமசாமி, ராமச்சந்திரன் அர்ச்சுணன் ஆகியோர் கலந்து கொண்டு இப்போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் கராத்தே தோ கொஜுகாய் சங்கத்தின் தலைவர் மாஸ்டர் சிதம்பரம் கலந்து கொண்டார்.
10 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் சிறந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
ஒவ்வொரு மாதமும் ஆங்காங்கே போட்டிகள் நடப்பதால், இங்கு போட்டி நடத்தி சிறந்த விளையாட்டாளர்களைத் தேர்வு செய்து அழைத்துச் செல்வோம் என்று சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்சே பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 28, 2026, 9:14 am
யமாலையும் மெஸ்ஸியையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது: டேனி ஒல்மோ
January 27, 2026, 10:30 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 26, 2026, 8:55 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
January 26, 2026, 8:52 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனலை வீழ்த்தியது மென்செஸ்டர் யுனைடெட்
January 25, 2026, 9:39 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 25, 2026, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 24, 2026, 10:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி
January 23, 2026, 8:41 am
அதிகம் சம்பாதித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்
January 23, 2026, 8:37 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 22, 2026, 11:28 am
