நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று கார்லஸ் அல்காரஸ் சாதனை

பாரிஸ்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு பொது டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் மற்றும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் இருவரும் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினர்.

இருப்பினும், கார்லஸ் அல்காரஸ் கடைசி இரு செட்களில் முன்னிலை வகித்தார்.  

இறுதியில் கார்லஸ் அல்காரஸ் 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவர் பிரெஞ்சு பொது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

பிரெஞ்ச் பொது போட்டியில் 21 வயதில் க்ளே, கிராஸ் அண்ட் ஹார்ட் என்ற மூன்று தளத்திலும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் நபரானார் கார்லோஸ் அல்காரஸ்.

முன்னதாக, 2023-ஆம் ஆண்டில் விம்பில்டன் ஃபைனல் பட்டம் மற்றும் 2022-ஆம் ஆண்டு யூ.எஸ் பொது ஃபைனல் பட்டத்தையும் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset