நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 53.48 லட்சம் போ் வேலைக்காக காத்திருக்கின்றனர்: தமிழக அரசு 

சென்னை:

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 53.48 லட்சம் போ் வேலைக்காக பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 இது குறித்து, மாநில அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட தகவல்:

தமிழகத்தில் மே 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 53,48,663-ஆக உள்ளது. அவா்களில் ஆண் பதிவுதாரா்களின் எண்ணிக்கை 24,63,081-ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 28,85,301-ஆகவும் உள்ளது. 281 போ் மூன்றாம் பாலினத்தவா்கள்.

மொத்தமுள்ள பதிவுதாரா்களில் வயது வாரியாக உள்ளவா்களின் எண்ணிக்கையையும் அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 18 வயதுக்கு உட்பட்டோா் 10,27,000 பேரும், 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டோா் 23.27 லட்சமும், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டோா் 16.93 லட்சமும், 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டோா் 2.47 லட்சம் பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset