செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் கனமழை: கோலாலம்பூர் உட்பட 35 விமான சேவைகள் பாதிப்பு
சென்னை:
சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை வரை விட்டு விட்டு பெய்தது.
இந்த நிலையில், இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 17 வருகை விமானங்கள், 18 புறப்பாடு விமானங்கள் உட்பட மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
டில்லி, கொல்கத்தா, பெங்களூரு, மதுரை உள்ளிட்ட 17 இடங்களில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
அதேபோல, அபுதாபி, கோலாலம்பூர், துபாய், சிங்கப்பூர், டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 18 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 10:52 am
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி: அண்ணாமலை வற்புறுத்திக் கேட்கும் அந்த 2 தொகுதிகள்
April 2, 2026, 7:13 am
9 ஆண்டுகளாக வரி கட்டாத ஜெயலலிதா வீட்டுக்கு சீல்
April 1, 2026, 7:59 am
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தகிக்கும் வெப்ப அலை வீசும்: பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
March 31, 2026, 7:16 am
சுமார் ரூ.624 கோடிக்கு சொத்து - வெளியான விஜயின் வேட்புமனு
March 30, 2026, 6:34 pm
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்
March 30, 2026, 6:09 pm
