நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

செல்போன் பேசியப்படி காரை ஓட்டியதாக வழக்கு: பிரபல யூடியூபர் டிடிஃப் வாசன் கைது

மதுரை: 

நெடுஞ்சாலையில் கார் ஓட்டிச்சென்ற டிடிஎப் வாசன், தான் COMEBACK கொடுத்துவிட்டேன் என ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதும், அச்செயலை காரின் DASHBOARD கேமராவில் பதிவுசெய்து யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் டி.டி.எப். வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான். ஆனால் என் மீது பொய் புகார் சுமத்தப்பட்டிருக்கிறது. யார் உயிருக்கும் தாம் பங்கம் விளைவித்தேன் என்று செய்தியாளர்களிடம் TTF VASAN கேள்விகளை முன்வைத்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset