நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை: 

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் பதிவு மையம் பூந்தமல்லி சாலையை ஒட்டியுள்ள ஆர்.பி.எஃப் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை (மே 16) இன்று முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. இந்த நிலையத்தை ரூ.735 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்தப் பணி தற்போது வேகமெடுத்துள்ளது.

காந்தி இர்வின் சாலையை ஒட்டி இருந்த ரயில்வே குடியிருப்பு, ரயில் நிலையத்தை ஒட்டியிருந்த ரயில்வே அலுவலகம் ஆகியவை ஏற்கெனவே இடிக்கப்பட்டது. 

இங்கு ரயில் நிலைய கட்டிடங்கள், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் காரணமாக, மின்சார ரயில் டிக்கெட் பதிவு மையம் எழும்பூர் ஆர்.பி.எஃப் அலுவலகம் வளாகத்தில் (பூந்தமல்லி சாலையை ஒட்டிய பகுதியில்) இன்று (மே.16) முதல் தற்காலிகமாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள், “எழும்பூர் ரயில்நிலையத்தில் 10,11- வது நடைமேடையை ஒட்டி, பூந்தமல்லி சாலை பக்கத்தில் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் பதிவு மையம் செயல்பட்டது.

இந்த டிக்கெட் பதிவு மையம் இன்று காலை முதல் தற்காலிகமாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி சாலையில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் டிக்கெட் பதிவு மையம் செயல்பட தொடங்கியுள்ளது. 

இந்த மையத்தில் தலா 3 முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்படுகின்றன. மொத்தம் 15 பணியாளர்கள் 8 மணி நேர ஷிஃப்டு அடிப்படையில், பணியில் இருப்பார்கள்” என்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset