நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது 

கோவை:

பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூ-டியூபா் சவுக்கு சங்கா், கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் தங்கியிருந்தபோது கோயம்புத்தூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அப்போது அவா் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 இது தொடா்பாக தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி போலீஸாா் தனியாக ஒரு வழக்கை சவுக்கு சங்கா் மீது பதிவு செய்தனா். 

மேலும் ஒரு பெண் பத்திரிகையாளரை அவதூறாகப் பேசியதாக ஒரு வழக்கையும், தமிழா் முன்னேற்றப் படை தலைவி வீரலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கையும் சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் பதிவு செய்தனா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களை போலியாகத் தயாரித்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கா் மீது மேலும் ஒரு வழக்கை சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பதிந்துள்ளனர். 

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset