நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ரூபாய் மதிப்பு குறைந்தால் இயல்பாகவே தங்கத்தின் விலை அதிகரிக்கும்: முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்

சிவகங்கை:

ரூபாய் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் விலை இயல்பாகவே அதிகரிக்குமென முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: 

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட எஸ். மாங்குடி வெற்றி பெற்றதும், காரைக்குடியில் சட்டக் கல்லூரி, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வேளாண்மைக் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகம் அமைக்கப்படும் என்று அளித்த மூன்று வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்.

கடந்தாண்டு ஜனவரியில் வளா் தமிழ் நூலகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். வெள்ளிக்கிழமை (ஜன. 30), சனிக்கிழமை (ஜன. 31) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிற நிகழ்ச்சிகளில் வேளாண்மைக் கல்லூரி, சட்டக் கல்லூரி வளாகங்களை தமிழக முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா். ஊரகப் பகுதிகள் நிறைந்த சிவகங்கை மாவட்டம், தற்போது கல்வி மாவட்டமாக மாறி வருகிறது.

சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து திமுக, காங்கிரஸ் தலைவா்கள் பேசி வருகின்றனா். அவா்கள் நல்ல முடிவு எடுப்பா். சிறிய கட்சிகள் கூட்டணி தொடா்பாக தங்களது விருப்பத்தை தெரிவிக்கின்றனா். ஆனால், பெரிய கட்சி நாட்டு மக்களைப் பற்றித்தான் சிந்திக்கும்.

தங்கம் ஒரு சேமிப்பு. வங்கியில் பணத்தை முதலீடு செய்தால் பணவீக்கத்தின் காரணமாக மதிப்பு குறைகிறது. தங்கத்தில் முதலீடு செய்தால் பத்திரமாக இருக்கும் என்பதால், அதை மக்கள் அதிகம் வாங்குகின்றனா். ரூபாய் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றாா் அவா்.

ஒரு அமெரிக்க டாலர் ஏறக்குறைய 92 இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூபாயின் மதிப்பு தினந்தோறும் குறைந்து வருகிறது. 

ஒரு மலேசிய ரிங்கிட் 23 ரூபாய் 32 காசுக்கு இன்று விற்பனை ஆனது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset