நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டி: மலேசியா வியாட்நாமிடம் தோல்வி

கோலாலம்பூர்: 

கத்தாரில் நடைபெற்று வரும் 23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியா வியாட்நாமிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. 

டி குழு நிலையிலான இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

களிஃபா அனைத்துலக காற்பந்து அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசியா மீண்டும் 2-0 என்ற கோல் கணக்கிலேயே தோல்வியைத் தழுவியது. 

இதற்கு முன் மலேசியா உஸ்பெகிஸ்தான் அணியுடன் தமது முதல் குழு நிலையிலான ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மலேசியா அடுத்து குவைத் அணியைச் சந்தித்து விளையாடவுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்குத் தேர்வு பெறும் மலேசியாவின் கனவு கானல் நீராகி போனது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset