நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

நடராஜனின் பந்துவீச்சில் டெல்லி கேபிட்டல்ஸ் சுருண்டது: டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ரன்குவிப்பில் ஹைதரபாத் அணி வென்றது  

புதுடெல்லி:

ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

அதிரடி காட்டிய ஹைதராபாத் அணியிடம் 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியைத் தழுவியது.

தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும் தில்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். 

பவர்-பிளே என்றழைக்கப்படும் முதல் 6 ஓவர்களில் அந்த அணி 125 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் பவர்-பிளே ஓவர்களில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதற்கு முன்பு, 2017-ஆம் ஆண்டு பெங்களூருக்கு எதிரான போட்டியில் பவர்-பிளே ஓவர்களில் கொல்கத்தா அணி 105 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 

அதிரடி காட்டிய, டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்தார்.
முதல் ஓவரில் 3 ஃபோர், ஒரு சிக்ஸ். 2ஆவது ஓவரில் 2 சிக்ஸ். 3-வது ஓவரில் 4 ஃபோர் ஒரு சிக்ஸ் என விளாசினர். அந்த வகையில் 16 பந்துகளில் அரைசதம் கடந்தார் டிராவிஸ் ஹெட். ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் இது.

தெறிக்கவிட்டுக்கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டை சதமடிக்க விடாமல் 89 ரன்களில் விக்கெட்டாக்கினார் குல்தீப் யாதவ். இருப்பினும் 32 பந்துகளில் 89 ரன் மலைப்பான எண் தான்.

மறுபுறம் சிக்ஸர் மழை பொழிந்த அபிஷேக் ஷர்மா  12 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து வந்த வீரர்களில் நிதிஷ்குமார் ரெட்டி 37 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஷாபாஸ் அஹமது - அப்துல் சமத் ரன்களை ஏற்றினர். கடைசி ஓவரில் சமத் 13 ரன்களுக்கும், கம்மின்ஸ் 1 ரன்னுக்கும் அவுட்டாகினர்.

கடைசி பந்தில் ஷாபாஸ் அஹமது சிக்சர் விளாச நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 266 ரன்களை குவித்தது. ஷாபாஸ் அஹமது 59 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

அதுமட்டுமன்றி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை(3), 250 ரன்களுக்கும் அதிகமாக திரட்டிய அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகேஷ்குமார், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தில்லி கேப்பிடல்ஸ் அணி 267 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது.

IPL 2021: SRH fast bowler T Natarajan ruled out of entire season due to  knee injury - India Today

துவக்க ஆட்டக்காரர்கள் பிரிதிவ் ஷா டேவிட் வார்னர் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். பிரிதிவ் ஷா 16, வார்னர் 1 ரன் எடுத்தனர்.

அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் அதிரடியாக ஆடினார். அவருக்கு பக்க பலமாக அபிஷேக் பட்டேல் நின்றிருந்தார். இருவரும் இணைந்து கணிசமாக டெல்லி அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர். 

ஜேக் ஃபிரேசர் 18 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். அதில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அவரது ஆட்டத்திற்கு மயங்க் மார்கண்டே முற்றுப்புள்ளி வைத்தார். அவரைத் தொடர்ந்து அஞ்சாமல் ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் பட்டேல் 42 ரன்களுக்கு மார்கண்டேயின் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவர் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்தார். 

அதன் பிறகு வந்தவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. கேப்டன் ரிஷப் பந்த் தன்னந்தனியாக போராடினார். அவரும் 44 ரன்களில் நடராஜனிடம் வீழ்ந்தார். 

அற்புதமாக பந்துவீசி 19 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார் நடராஜன். 

19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி கேபிட்டல்ஸ் 199 ரன்கள் மட்டும் எடுத்தது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset