நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 மாநிலங்களின் வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது

கோலாலம்பூர்:

மூன்று மாநிலங்களின் வெள்ளப் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

நட்மா, தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தின் ஆகியவற்றின் பதிவு இதை உறுதிப்படுத்தியது.

நாட்டில் பெய்த கனமழையை தொடர்ந்து சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,319 பேர் நேற்று நள்ளிரவு வரை வெள்ள நிவார மையங்களில் தங்கியிருந்தனர்.

இந்த எண்ணிக்கை இன்று காலை 759ஆக குறைந்தது.

சிலாங்கூரில் திறக்கப்பட்டிருந்த 3 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கிள்ளான் மாவட்டத்தில் 204ஆக இருந்த எண்ணிக்கை 57ஆக குறைந்தது.

கோல சிலாங்கூரில் 48ஆக இருந்த எண்ணிக்கை 12ஆக குறைந்தது.

பெட்டாலிங் மாவட்டத்தில் 382ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 90ஆக குறைந்தது.

இதே போன்று நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்து வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset