
செய்திகள் இந்தியா
4,650 ரூபாய் கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் பறிமுதல்
புதுடெல்லி:
இந்தியாவின் 75 ஆண்டு கால பொதுத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான ரொக்கமும் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1-ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை அவ்வாணையம் தெரிவித்தது.
முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் முன் நாடு முழுவதும் ரூ.4,650 கோடி மதிப்புள்ள மதுபானம், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இதில், ரொக்கம், ரூ.395.39 கோடி, மதுபானங்கள் ரூ.489.31 கோடி, போதைப்பொருள்கள் ரூ.2,068.85 கோடி, இலவசப் பொருட்கள் ரூ.1,142.49 கோடி.
அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.778 கோடி; குஜராத் மாநிலத்தில் ரூ.605 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் மட்டும் மார்ச் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை ரூ.460 கோடி மதிப்புள்ள நகை, பணம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் ரொக்கம் ரூ.53 கோடி, போதைப்பொருள்கள் ரூ.293 கோடி, தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.78 கோடி, மதுபானங்கள் ரூ.4.4 கோடி, இலவசப் பொருட்கள் ரூ.31 கோடி ஆகும்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் ரூ.3,475 கோடி பறிமுதலானது.
இந்நிலையில் தற்போது ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.2,500 கோடி மதிப்பில் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இது எனத் தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am