நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

மார்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை டிங்கி காய்ச்சலால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 416-ஆகப் பதிவானது.

அதற்கு முந்தைய வாரத்தை விட இது 67 அதிகம்.

2024-ஆம் ஆண்டின் முதல் 14 வாரங்களில் 5,500 பேருக்கு டிங்கி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.

மார்ச் மாதம் 25வ்ஆம் தேதி நிலவரப்படி டிங்கி பாதிப்பு காரணமாக ஏழு பேர் மாண்டுவிட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்.

2023-ஆம் ஆண்டில் டிங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,949-ஆகப் பதிவானது. 

அவ்வாண்டில் டிங்கி காரணமாக ஆறு பேர் மாண்டனர்.

தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரில் 90 வட்டாரங்களில் டிங்கி பாதிப்பு கடுமையாக உள்ளது.

அவற்றில் 20 வட்டாரங்களில் 10 அல்லது அதற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை


 

தொடர்புடைய செய்திகள்

+ - reset