நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக அரசியல் கட்சிக்காக ஹவாலா மூலம் ரூ200 கோடி: விமான நிலையத்தில் சிக்கிய மலேசியா ரிட்டர்ன் வினோத் 

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி ஒன்றுக்கு மலேசியாவில் இருந்து ரூ200 கோடியை ஹவாலா நெட்வொர்க் மூலம் கடத்தி வர இருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல் களத்தில் தொடர்ந்து சிக்கும் பெருமளவு பணம் பெரும் புயலையே கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

அதேநேரத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து பல இடங்களில் வருமான வரித்துறை
அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த வினோத் குமார் ஜோசப் எனபவரை விமான நிலையத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

வினோத் குமாரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சி ஒன்றுக்காக தேர்தல் செலவுகளுக்கு ரூ200 கோடியை ஹவாலா நெட்வொர்க் மூலம் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. 

வினோத்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset