நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எக்ஸ் பயனர்களுக்கு இலவச பிரீமியம் சந்தா: எலான் மஸ்க் 

கலிப்போர்னியா: 

எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவைப் பயனர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிகமான அங்கீகரிக்கப்பட்ட சந்தாதாரர்களை பின் தொடர்பவர்களைக் கொண்டிருக்கும் கணக்குகளுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும்.

மேலும் 5000-க்கும் அதிக அங்கீகரிக்கப்பட்ட  சந்தாதாரர்களை பின் தொடர்பவர்களாகக் கொண்ட கணக்குகளுக்குப் பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். 

எலான் மஸ்கின் புதிய அறிவிப்பின் படி எக்ஸ் தளத்தில் 2500 பின் தொடர்பவர்களை வைத்திருப்போருக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது.

மாறாக 2500 பின் தொடர்பவர்கள் இருப்பின் அவர்கள் எக்ஸ் தளத்தின் பேசிக், பிரீமியம் அல்லது பிரீமியம் பிளஸ் சந்தாக்களில் எதையேனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset