நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா மேம்பாலத்தை மோதிய சரக்கு கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள் தான் 

வாஷிங்டன்:

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. 

கப்பல் மோதியதால் மொத்த பாலமும் உருக்குலைந்தது தண்ணீக்குள் விழுந்தது. 

இந்நிலையில் தான் அந்த கப்பலின் குழுவில் இருந்த 22 பேரும் இந்தியர்கள் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அமரிக்காவின் பால்டிமோர் நகரில் படப்ஸ்கோ ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரும்பாலனா பிரமாண்டமாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் தினமும் வாகனங்கள் சென்று வருகின்றனர்.

இந்த பாலத்துக்கு கீழே கப்பல்கள் சென்று வருகின்றன. ஒரே நேரத்தில் பாலத்தின் மேல்புறம் கார் உள்ளிட்ட வாகனங்களும் கப்பலுக்கு கீழே ஆற்று தண்ணீரில் கப்பல்களும் செல்வதை நாம் பார்க்கலாம்.

இந்நிலையில் தான் அமெரிக்காவின்  ல்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியது. 

இதனால் அந்த மொத்த பாலமும் உருக்குலைந்துபோனது. 

இதனால் பாலத்தில் சென்ற வாகனங்கள் தண்ணீருக்குள் விழுந்தன. 

மேலும் விபத்து நடந்தவுடன் மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரில் தத்தளித்தவர்களை அவர்கள் மீட்டனர் .

இந்நிலையில் கப்பலில் உள்ள குழுவில் இருக்கும் அனைவரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ள. 

அதாவது கப்பலை இயக்கும் குழுவில் அங்கம் வகிக்கும் 22 பேரும் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை சினர்ஜி மரைன் குழு உறுதி செய்துள்ளது. 

பார்த்திபன் நாகராஜன

தொடர்புடைய செய்திகள்

+ - reset