நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மக்கள் பணத்தைப் பயன்படுத்தும் நிலையேற்பட்டால் மலேசியா காமன்வெல்த் போட்டியை ஏற்று நடத்தாது: ஹன்னா இயோ

கோலாலம்பூர்: 

மக்கள் பணத்தைப் பயன்படுத்தும் நிலையேற்பட்டால் மலேசியா 2026-ஆம் ஆண்டுக்கான காமென்வெல்த் போட்டியை ஏற்று நடத்தாது என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார். 

இந்தப் போட்டியை ஏற்று நடத்த காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் வழங்கும் 602 மில்லியன் வெள்ளியை விட அதிகமான தொகை செலவாகும் என்றால் அப்போட்டியை ஏற்று நடத்த வேண்டிய அவசியம் இல்லையென்றார் அவர்.

அதற்கேற்பக்,கவனக்குறைவான முடிவுகள் எடுக்கப்படுவதைத் தவிர்க்க ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக விவரிப்பதில் அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும்.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் எப்போதும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றது என்று அவர் உறுதி பூண்டார். 

2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு மலேசியா முன்வைத்துள்ள அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்குமாறு ஹன்னாவிடம் அஃப்னான் ஹமிமி தைப் அசாமுதீன் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார்.

2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்துவது குறித்து நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset