நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பாலியல் வழக்கில் சிக்கிய பிரேசில் கால்பந்து வீரரை ஜாமினில் விடுவித்த ஸ்பெயின் நீதிமன்றம்

பாரிஸ்:

இரவு கிளப்பில் பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பிரபல பிரேசில் கால்பந்து வீரர் டேனி ஆல்வ்ஸுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

தற்போது மேல்முறையீட்டில் அவருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வழக்கில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பிரேசில் வீரர் டேனி ஆல்வ்ஸ் முன்வந்த நிலையில், ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் அவரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக இந்த வழக்கில் ஜாமினில் இருந்து விடுவிப்பதற்காக ஒரு மில்லியன் யூரோ செலுத்தினார் ஆல்வ்ஸ்.

அத்துடன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராகவும் மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவரை ஜாமினில் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டில் நைட் கிளப் ஒன்றில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் ஆல்வ்ஸ், பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தலும் அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset