நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அதிமுக கூட்டணியில் தேமுதிக; 5 தொகுதிகள் ஒதுக்கீடு 

சென்னை: 

அதிமுக கூட்டணியில் மறைந்த விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் இடம்பெற்றது. தேமுதிகவிற்கு 5 மக்களவை தொகுதிகள் வழங்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 

இந்நிலையில், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்ததாக இரு கட்சிகளும் தெரிவித்தன. 

அதுமட்டுமல்லாமல், மாலை வேளையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து தொகுதி உடன்படிக்கையிலும் கூட்டணி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர். 

இந்திய மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.  திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமைகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset