நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் முதல் முறையாக 'மூ - MU' எனும் கிருமித் தொற்று பயணிகளிடம் கண்டுபிடிப்பு: ஜப்பான் சுகாதாரத்துறை

டோக்கியோ:

ஜப்பான் நாட்டில் 'மூ' (Mu) எனும் புதுவகைக் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் சம்பவத்தை உறுதிசெய்துள்ளது அந்நாட்டு சுகாதாரத்துறை 

உலகச் சுகாதார நிறுவனம் (WHO) அதைக் கவனிக்கவேண்டிய ஒன்று என்று வகைப்படுத்தியுள்ளது.

கொலம்பியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட அந்த ரகக் கிருமி, தடுப்புமருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போகக்கூடும் என்ற அச்சம் இப்போது நிலவுகிறது.

Japan to set up coronavirus testing centres near major airports for  overseas travellers

இரு வேறு விமான நிலையங்களில் பயணிகள் இருவருக்கு அந்த வகைக் கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பானின் சுகாதார அமைச்சு நேற்று கூறியது.

ஒருவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்தும், மற்றவர், பிரிட்டனிலிருந்தும் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.

'மூ' வகைக் கிருமி, குறைந்தது 39 நாடுகளில் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset