நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அதிமுகவின் 16 வேட்பாளர்கள்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

சென்னை:

வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

தேமுதிகவுக்கு 5 இடங்கள், புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமிக்கு 1 தொகுதி, எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது

மேலும், கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

16 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் மக்களவைக்கு போட்டியிட உள்ளனர். 

அதிமுக வேட்பாளர் பட்டியல் வருமாறு : 

சென்னை வடக்கு : இரா. மனோகர் @ராயபுரம் ஆர் மனோ 

சென்னை தெற்கு: டாக்டர் ஜெ. ஜெயவர்தன் 

காஞ்சிபுரம் (தனி): இ.ராஜசேகர்

அரக்கோணம்: ஏ.எல் விஜயன் 

கிருஷ்ணகிரி: வி.ஜெயப்பிரகாஷ் 

ஆரணி: ஜிவி கஜேந்திரன் 

விழுப்புரம் (தனி): ஜெ.பாக்கியராஜ் 

சேலம்: டி. விக்னேஷ்

நாமக்கல்: எஸ். தமிழ்மணி 

ஈரோடு: ஆற்றல் அசோக்குமார் 

கரூர்: கே. ஆர்.எல் தங்கவேல் 

சிதம்பரம் (தனி): எம்.சந்திரஹாசன்  

நாகப்பட்டினம் ( தனி) : டாக்டர் ஜி. சுர்ஜித் சங்கர் 

மதுரை: டாக்டர் பி.சரவணன் 

தேனி: வி.தி. நாராயணசாமி 

இராமநாதபுரம்: ஜெயப்பெருமாள்

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset