செய்திகள் தமிழ் தொடர்புகள்
பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக; இன்று கையெழுத்தாகிறது தொகுதி உடன்படிக்கை
சென்னை:
பாஜக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான உடன்படிக்கை இன்று கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தமிழக அரசியல் கட்சிகள் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பாமகவை இழுக்க முயற்சிகள் மேறகொள்ளப்பட்ட நிலையில் பாமகவின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்து அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் என்று பாமக அறிவித்திருந்தது.
இதற்கு முன் பாமக அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த வேளையில் பாமக பாஜகவுடன் இணைந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2026, 9:21 pm
சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து பயணி குதித்ததால் பரபரப்பு
May 3, 2026, 11:17 am
தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
May 3, 2026, 9:37 am
தன் வேட்பாளர்கள் விலை போக வாய்ப்புள்ளதால் குதிரை பேரத்தை தடுக்க விஜய் முக்கிய ஆலோசனை
May 2, 2026, 9:29 am
வட இந்தியா சுற்றுலா சென்ற திருச்சியைச் சேர்ந்த ஐவர் படகு விபத்தில் சிக்கி மரணம்
April 30, 2026, 11:58 pm
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்ல வேண்டாம்: தவெக வேட்பாளர்களுக்கு விஜய் கட்டளை
April 30, 2026, 4:08 pm
கருத்துக் கணிப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு
April 29, 2026, 9:32 pm
