செய்திகள் தமிழ் தொடர்புகள்
தேர்தல் நடத்தை விதி என்று கூறி சிறு வணிகர்களை பிடிக்காதீர்கள்; ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதி வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை
சென்னை:
சென்னை, தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை நேரில் சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜாவும் முக்கிய நிர்வாகிகளும் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதை தேர்தல் அதிகாரிகள் தவறான கண்ணோட்டத்தில் கையாள்வதன் காரணமாக அடித்தட்டு, நடுத்தர வணிகர்கள் தான் பெரும்பாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதனால் பொருள், பண இழப்பு, மன உளைச்சல், வாழ்வாதார இழப்புக்கு வணிகர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். தற்போது இருக்கின்ற பண வீக்கம், பொருளாதார மந்தநிலை அடிப்படையில், ரொக்க கொள்முதலுக்கு குறைந்தது ரூ.2லட்சம் வரை வணிகர்கள் எடுத்துச்செல்ல அனுமதி அளித்திட வேண்டுகிறோம்.
காய்கறி மற்றும் பழம் வியாபாரம் செய்கின்ற சிறு வியாபாரிகள் கூட குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.
வணிகர்கள் உரிய விற்பனை பட்டியலுடன் பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களை தடுத்து கைப்பற்றுவதையும், தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தி, காலதாமதம் செய்வதையும் தவிர்த்திட வேண்டி, அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, பொருட்கள் விநியோகத்திலும், மக்கள் சேவையிலும் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவண்ணம் தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்திட வேண்டும்.
வணிகர் தின மாநில மாநாடு மே 5ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுபணிகளில் எவ்வித குறுக்கீடும் செய்திடாமல் ஒத்துழைப்பு அளித்திட அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 15, 2025, 5:57 pm
தமிழறிஞர்களுக்கு அரசின் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
January 15, 2025, 12:53 pm
கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.5000 ஆக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
January 15, 2025, 12:17 pm
1,000 காளைகள், 900 வீரர்கள் பங்கேற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு அனல் பறக்க நடந்து வருகிறது
January 14, 2025, 7:15 pm
களைகட்டியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
January 14, 2025, 1:01 am
தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: த வெ கழகத் தலைவர் விஜய்
January 12, 2025, 11:08 pm
சாலமன் பாப்பையா மனைவி காலமானார்
January 12, 2025, 5:07 pm
“தமிழர்களின் திறமை, உழைப்பு தவிர்க்க முடியாதது”: அயலகத் தமிழர் மாட்டில் உதயநிதி உரை
January 12, 2025, 2:09 pm