நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் முன்னேற்றம்

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்குள் அர்செனல் அணியினர் முன்னேறி உள்ளனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற சுற்று 16ன் இரண்டாவது ஆட்டத்தில் அர்செனல் அணியினர் போர்தோ அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் போர்தோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஆனால் இரு ஆட்டங்களின் முடிவில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் போர்தோ அணியுடன் சமநிலை கண்டனர்.

இதனைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் சிறந்து விளங்கிய அர்செனல் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் போர்தோ அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 4-2 என்ற மொத்த கோல் கணக்கில் நபோலி அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset