நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தேசிய ஹாக்கி விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் தீரேஷ் குணசீலன்

கோலாலம்பூர்:

தேசிய ஹாக்கி விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக தீரேஷ் குணசீலன் உருவெடுத்து வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான மலேசிய ஹாக்கி லீக் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதில் கோலாலம்பூர் சிட்டி அணி மிகச் சிறந்த இளையோர் அணியாக விளங்கியது.

இப் போட்டியின் வாயிலாக பல வீரர்கள் சுக்மா, 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான எம்எஸ்எஸ்எம் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.

குறிப்பாக இதில் தீரேஷ் குணசீலன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வீரராக விளங்குகிறார்.

அவர் புக்கிட் ஜலில் தேசிய விளையாட்டுப் பள்ளி மாணவராக உள்ளார்.

ஒவ்வொரு நிலையையும் சிரமமின்றி விளையாடக்கூடிய ஒரு வீரராகவும் அவர் உள்ளார்.

May be an image of 2 people, people playing football, people playing American football and text

புக்கிட் டாமன்சாரா தேசியப் பள்ளியில் முதலாம் ஆண்டில் பயிலும் போது அவரின் ஹாக்கி பயணம் தொடங்கியது.

5ஆம் ஆண்டு பயிலும் போது அவர் பள்ளி ஹாக்கி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அதே ஆண்டில் அவர் கோலாலம்பூர் அணியின் வீரராகவும் விளையாடினர்.

3 சகோதரர்களுடன் ஹாக்கி விளையாடும் குடும்பத்திலிருந்து வந்த தீரேஷின் தந்தை குணசீலன் ராஜூ, 2018 முதல் தனது மகன்களின் ஹாக்கி விளையாட்டுகளில் ஈடுபடுத்தி வருகிறார்.

மலேசியாவின் முன்னணி ஹாக்கி லீக்கில் விளையாடியது குறித்து தீரேஷ் கூறியதாவது,

என் தந்தை குணசீலன், தற்போதைய பயிற்சியாளர் விக்கி, முந்தைய பயிற்றுநர் சுக்ரி முத்தாலிப் உட்பட என்னை சுற்றி உள்ளவர்கள் எனக்கு பக்கபலமாக உள்ளனர்.

இது கடினமாக உழைக்கவும் எனது விளையாட்டை மேம்படுத்துவதற்கும் எனக்கு நம்பிக்கையை அளித்தது.

இதனால் மலேசிய ஹாக்கி லீக்கின் விளையாட்டாளராக மேம்படுத்தப்பட்டுள்ளேன்.

குறிப்பாக மலேசிய ஹாக்கி லீக்கில் கோலாலம்பூர் சிட்டி அணிக்காக விளையாடினேன். அவ்வணி முதல் 8 இடங்களில் இடம் பிடித்தது.

இது எனக்கு கிடைத்த வெற்றியாகும். அதே வேளையில் ஹாக்கி விளையாட்டில் சாதிப்பது எனது லட்சியம் என்று தீரேஷ் குணசீலன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset