நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் முதலீடு செய்ய அதிகமான ஜெர்மன் முதலீட்டாளர்களுக்குப் பிரதமர் அன்வார் அழைப்பு 

பெர்லின்:

தென்கிழக்காசியாவில் மலேசியாவின் மூலோபாய முதலீட்டு இடமாகப் பயன்படுத்திக் கொண்டு இங்கு வணிகத்தில் ஈடுப்படும் ஜெர்மன்  முதலீட்டாளர்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.

ஐரோப்பியக் கூட்டமைப்பில் ஜெர்மனி தங்களின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாகும்.

ஜெர்மன் இதுவர்ரை மலேசியாவில் 70.24 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்துள்ளதாகப் பிரதமர் அன்வார் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் நட்ந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். 

இன்ஃபினியன் டெக்னாலஜிஸ் ஏஜி உட்பட ஜெர்மனியிலுள்ள பல முன்னணி நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அந்த வகையில், வர்த்தகம் மட்டுமல்லாமல் முதலீட்டை அதிகரிப்பது மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஜெர்மனுடன் மலேசியா பரந்த ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். 

மாணவர் பயிற்சியில் கவனம் செலுத்துவதில் மலேசியா ஆர்வம் காட்டுவதாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

சுமார் 1,000 மலேசிய மாணவர்கள் ஜெர்மன் நிறுவனங்களில் பயிற்சி பெற உள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (REB) மற்றும் பசுமைத் தொழில்நுட்பத்தில் புதிய முதலீடுகளின் அடிப்படையில் பெர்லினின் ஆர்வத்தையும் மலேசியா வரவேற்கிறது என்று பிரதமர் கூறினார்.

2000-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களிடையே மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக ஜெர்மனி உள்ளது.

அதே சமயம் ஆசியான் உறுப்பு நாடுகளில் ஜெர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மலேசியா உள்ளது.

2022-ஆம் ஆண்டில் இல் RM59.87 பில்லியனுடன் (US$13.62 பில்லியன்) ஒப்பிடுகையில் 2023-ஆம் ஆண்டில், ஜெர்மனியுடனான மலேசியாவின் வர்த்தக மதிப்பு 5.9 சதவீதம் அதிகரித்து RM63.45 பில்லியன் (US$13.90 பில்லியன்) ஆக இருந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset