நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2021 மே முதல் கிட்டத்தட்ட 97% தொழிலாளர் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன: ஸ்டீவன் சிம் 

கோலாலம்பூர்:

2021 மே முதல் மனிதவள அமைச்சு பெற்ற 34,156 தொழிலாளர் பிரச்சினைகளில் கிட்டத்தட்ட 97% தீர்க்கப்பட்டுள்ளன.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மக்களவையில் கூறினார்.

பிப்ரவரி 24 நிலவரப்படி, அமைச்சு பெற்ற 33,093 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

687 பரிசீலனையில் உள்ளது. 280 சரிபார்க்கப்படுகின்றன. மேலும் 96 இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஸ்டீவன் சிம் கூறினார்.

பல பிரச்சினைகளுக்கு செலுத்தப்படாத சம்பளமே முக்கிய காரணமாக உள்ளது. இதில் 6,393 வழக்குகள் உள்ளன.

மற்ற புகார்களில் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்காதது (3,095), சட்டவிரோத ஊதியக் கழிவுகள் (2,895), கூடுதல் நேரமின்மை, பிரிவினைப் பலன்கள் (2,298) அறிவிப்பு இல்லாமல் பணிநீக்கம் (2,768) ஆகியவை அடங்கும்.

முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் (2,424) வழங்காதது, ஒப்பந்தத்தின் கீழ் (1,577) வேலை செய்யாத வழக்குகளும் இருப்பதாக ஸ்டீவம் சிம் கூறினார்

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset