நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென். சிட்டி - லிவர்பூல் சமநிலை

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் சமநிலை கண்டனர்.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கியது.

கடுமையான போராட்டங்களுக்கு பின் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.

லிவர்பூல் அணியின் கோலை அலிஸ்டர் அடித்த வேளையில் மென்செஸ்டர் சிட்டி அணியின் கோலை ஜேம்ஸ் ஸ்டோன்ஸ் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்ஹாம் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியுடன் சமநிலை கண்டனர்.

பிரிக்டோன் 1-0 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset